Map Graph

கொழும்பு துறைமுக நகரம்

துறைமுக நகரம் என அழைக்கப்படும் கொழும்பு சர்வதேச நிதி நகரம் என்பது இலங்கையின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள ஒரு சிறப்புப் பொருளாதார வலயமும், பன்னாட்டு நிதி மையமும் ஆகும். இக்கரையோர நகரம் காலிமுகத் திடலிற்கு அண்மையாக நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இதற்கான நில மீட்புப் பணிகள் 2018 சனவரி 2018 யில் நிறைவடைந்தன. முழுத் திட்டத்திற்குமான செலவு 15 பில்லியன் அமெரிக்க டொலராக 2017 ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டது. இத்திட்டம் சீனாவின் பட்டை ஒன்று பாதை ஒன்று என்ற முயற்சியின் ஒரு பகுதியாகும். இந்நகரம் கொழும்பு துறைமுக விரிவாக்க செயற்றிட்டதின் கட்டுமான வளங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும்.

Read article